உத்தர பிரதேசத்தில் மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்த பேருந்து - 10 பேர் உயிரிழப்பு

காசிப்பூர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
உத்தர பிரதேசத்தில் மின் கம்பியில் உரசியதால் தீப்பிடித்த பேருந்து - 10 பேர் உயிரிழப்பு
Published on

காசிப்பூர்,

உத்தரபிரதேசம் மாநிலம் காசிப்பூரில் பேருந்து தீ பிடித்து எரிந்ததில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காசிப்பூர் பகுதியில், திருமண நிகழ்வுக்கு சென்ற பேருந்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில், 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்து தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.பேருந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததால், மக்கள் பாதுகாப்புக்காக வெளியே குதிக்க முடியாமல் போனது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com