அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்படும் - சீரம் இன்ஸ்டிடியூட்

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் என்று தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இன்று தெரிவித்துள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியின் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கப்படும் - சீரம் இன்ஸ்டிடியூட்
Published on

புனே

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசியை பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இன்று புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவில் ஆய்வு நடத்த பிரதமர் மோடி சென்றார். ஆவர் ஆய்வு நடத்தி சென்றசில நிமிடங்களில்

செய்தியாளர்கள் சந்திப்பில் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியதாவது:-

அடுத்த இரண்டு வாரங்களில் அவசர உரிமத்திற்கு விண்ணப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும்,

கொரோனா தடுப்பூச்சி அங்கீகாரத்திற்குப் பின் ஆரம்பத்தில் இந்தியாவிலும் பின்னர் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் விநியோகிக்கப்படும்.அதடுப்பூசி ஆரம்பத்தில் இந்தியாவில் விநியோகிக்கப்படும், பின்னர் ஆப்பிரிக்காவில் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய சந்தைகளை அஸ்ட்ராசெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு கவனித்து வருகின்றன. உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு அவர்களுக்கு எங்கள் உதவி தேவைப்பட்டால், அவற்றை ஆதரிக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com