இமாசலபிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி

இமாசலபிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானார்கள்.
இமாசலபிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலி
Published on

சிம்லா,

இமாசலபிரேதச மாநிலத்தில் இந்திய-சீன எல்லையில் உள்ள சிப்கலா என்ற பகுதியில் காஷ்மீர் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 16 பேர் நேற்று காலையில் ரோந்து சென்றனர். அப்போது திடீரென அங்கு பனிச்சரிவு ஏற்பட்டது.

இதில் 6 வீரர்கள் சிக்கினர். மற்ற வீரர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். பனிச்சரிவில் சிக்கி இறந்த ஒரு வீரரின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து கின்னார் மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் கோபால் சந்த் கூறுகையில், நேற்று காலை 11 மணி அளவில் திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 6 வீரர்கள் சிக்கி கொண்டனர். அவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. கடும் பனிச்சரிவு ஏற்பட்டு இருப்பதால் மற்ற வீரர்களை இரவு வரை மீட்க முடியவில்லை. அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றார்.

எனவே அவர்கள் 5 பேரும் பலியாகி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அங்கு மீட்புப் பணியில் 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com