“குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக விவசாயிகளை சிலர் குழப்புகிறார்கள்” - மத்திய மந்திரி குற்றச்சாட்டு

குறைந்தபட்ச விலை விவகாரத்தில், விவசாயிகளை சிலர் குழப்புவதாக மத்திய ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் குற்றம் சாட்டியுள்ளார்.
“குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக விவசாயிகளை சிலர் குழப்புகிறார்கள்” - மத்திய மந்திரி குற்றச்சாட்டு
Published on

லக்னோ,

புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அழித்து விடும் என்பதாகும். ஆனால் குறைந்தபட்ச விலை விவகாரத்தில், விவசாயிகளை சிலர் குழப்புவதாக மத்திய ஜலசக்தி துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது தொடர்பாக அவர் கூறுகையில், வேளாண் சட்டங்களை கருப்பு சட்டங்களாக வர்ணிப்போருக்கு விவசாயம் பற்றிய புரிதல் இருந்தால், இந்த சட்டங்களில் எது கருப்பு என வந்து சொல்ல வேண்டும். மக்களால் புறக்கணிக்கப்பட்ட அல்லது எதிர்காலம் இல்லாத இந்த அரசியல் கட்சியினர்தான் குடியுரிமை திருத்த சட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது போல, வேளாண் சட்டங்கள் தொடர்பாகவும் விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என கூறினார்.

விவசாயிகளின் வளர்ச்சி மற்றும் அவர்களது வருவாயை இரட்டிப்பாக்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதிபூண்டிருப்பதாக கூறிய செகாவத், அந்த வகையில்தான் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒன்றரை மடங்கு அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com