

புதுடெல்லி,
தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன், இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய அனுமதிக்க கோரி போலீஸ் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகள் டெல்லி போலீஸ் வசம் உள்ளது. குறிப்பாக தினகரன்சுகேஷ் சந்திரசேகர் இடையேயான தொலைபேசி உரையாடல் தொடர்பான பதிவுகள் குறுந்தகடு வடிவில் உள்ளன. இந்த குரல் மாதிரிகளின் அடையாளங்களை உறுதி செய்யும் வகையில், அவற்றை டெல்லியில் உள்ள சி.பி.ஐ.அலுவலகத்தின் தடயவியல் பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான விசாரணையின் போது, சிறப்பு நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க டிடிவி தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகருக்கு உத்தரவிட்டது. இன்று டெல்லி நீதிமன்றம் டிடிவி தினகரன், சுகேஷ் ஆகியோரின் குரல் மாதிரிகளை சேதனை செய்ய காவல் துறைக்கு அனுமதி வழங்கியது. இருவரது குரலையும் பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.