சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்; பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.
சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்துங்கள்; பிரதமருக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்
Published on

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்றம் கட்டுவது, பிரதமருக்கு வீடு கட்டுவது உள்ளிட்டவற்றை அடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை கொரோனா காலத்தில் செய்யக் கூடாது. அதற்குச் செலவிடும் தொகையை மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடலாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு ரூ 6 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மகக்ளுக்கு இலவச உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com