

அரியானா,
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சீரோமனி அகாலிதளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுக்பீர் சிங் பாதல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளின்படி என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
எனவே கடந்த சில தினங்களாக என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்வதோடு, கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.