

புனே,
மராட்டிய மாநிலம் புனே சர்வதேச விமான நிலையத்தில், சுகோய் போர் விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் டயர் வெடித்தது. இந்த லேசான விபத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றாலும், விமான ஓடுதளம் சுமார் 2 மணி நேரம் மூடப்பட்டது.
இதன் காரணமாக புனே விமான நிலையத்திற்கு வர வேண்டிய விமானங்கள் மும்பைக்கு திருப்பி விடப்பட்டன. அதேபோல், விமானம் புறப்பாடும் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்திய விமானப்படை அதிகாரிகளால் விமான ஓடுதளம் சீர் செய்யப்பட்டதையடுத்து, விமான சேவை சீரானது.