காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்

காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாத தலைவர் சையத் கிலானிக்கு இன்டர்நெட் சேவை வழங்கிய விவகாரம் தொடர்பாக இரு பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் பிரிவினைவாதி கிலானிக்கு இன்டர்நெட் சேவை; பிஎஸ்என்எல் அதிகாரிகள் சஸ்பெண்ட்
Published on

காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்முகாஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கிறது. இதனையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தொலைத்தொடர்பு சேவையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்ட நிலையில் பிரிவினைவாத தலைவர் கிலானிக்கு மட்டும் லேண்ட் லைன் தொடர்பு மற்றும் இன்டர்நெட் சேவை கிடைத்துள்ளது.

ஆகஸ்ட் 4-ம் தேதியே கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் கிலானி மட்டும் 8-ம் தேதி வரை டுவிட்டரில் செய்தியை டுவிட் செய்து வந்துள்ளார். இவ்விவகாரத்தில் குழப்பம் அடைந்த போலீசார் பிடியில் பிஎஸ்என்எல் அதிகாரிகள் சிக்கியுள்ளனர்.

விசாரணை தொடங்கியதும் கிலானிக்கான இன்டர்நெட் சேவையை ரத்து செய்துவிட்டு அதிகாரிகள் அமைதியாக இருந்துள்ளனர்.

விசாரணையில் உண்மை தெரியவந்ததும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com