எச்-1 பி விசா பிரச்சினையால் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பொறியாளரின் மனைவி தற்கொலை

எச்-1 பி விசா பிரச்சினையால் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பொறியாளரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எச்-1 பி விசா பிரச்சினையால் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பொறியாளரின் மனைவி தற்கொலை
Published on

ஐதராபாத்,

எச்-1 பி விசா பிரச்சினையால் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய பொறியாளரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி ராஷ்மி ஷர்மா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்காவில் வசித்து வந்தார். அங்கு பாங்க் ஆப் அமெரிக்கா நிறுவனத்தில் 8 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் விசா விதிமுறைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தினால் சஞ்சய்க்கு விசா நீட்டிப்பு மறுக்கப்பட்டது. இதனால் கடந்த மாதம் சஞ்சய் இந்தியா திரும்பி ஐதராபாத்தில் குடியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

திடீரென விசா மறுக்கப்பட்டதால், கடுமையான கடன் சுமை சஞ்செய் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியா திரும்பிய பின்னும் சஞ்சய்க்கு முறையாக வேலை எதுவும் கிடைக்காததால் பெரும் கஷ்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை தனது இரண்டு குழந்தைகளும் வெளியில் சென்றபோது, சஞ்சய்யின் மனைவி ராஷ்மி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராஷ்மியின் கணவர் சஞ்சயிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாகவே ராஷ்மி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com