பஹல்காம் தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் மோடி


பஹல்காம் தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிக்கிறது: பிரதமர் மோடி
x
தினத்தந்தி 27 April 2025 12:11 PM IST (Updated: 27 April 2025 1:18 PM IST)
t-max-icont-min-icon

அமைதி திரும்ப தொடங்கிய நேரத்தில், வளர்ச்சி பொறுக்காமல் காஷ்மீரை அழிக்க நினைக்கிறார்கள் என்று மோடி பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி மாதம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது. ஜம்மு காஷ்மீர் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதை நமது எதிரிகள் விரும்பவில்லை.அமைதி திரும்ப தொடங்கிய நேரத்தில், வளர்ச்சி பொறுக்காமல் காஷ்மீரை அழிக்க நினைக்கிறார்கள். பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, ஒரு தேசமாக நாம் வலுவான மன உறுதியை வெளிப்படுத்த வேண்டும். பஹல்காம் தாக்குதல் கோழைத்தனமானது.

பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முழுவதும் ஒரே குரலில் பேசுகிறது. காஷ்மீர் அழிக்கப்பட வேண்டும் என்று பயங்கரவாதிகளும், பயங்கரவாதத்தின் மூளையாக செயல்பட்டவர்களும் விரும்புகிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகள் இந்தியா பக்கமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும். பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு கடுமையான பதிலடி கொடுக்கும்" இவ்வாறு அவர் பேசினார்.

1 More update

Next Story