

புதுடெல்லி,
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை பிடித்தது.
இதையடுத்து, ஜனாதிபதி மாளிகை முற்றத்தில் கோலாகலமாக நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 24 கேபினட் மந்திரிகளும், 33 ராஜாங்க மந்திரிகளும் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், எந்த விஷயம் பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரியவில்லை.