விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி: பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்

விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணைத் தொகையாக ரூ.19,500 கோடியை பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்.
விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி: பிரதமர் மோடி நாளை விடுவிக்கிறார்
Published on

புதுடெல்லி,

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ. 1.38 லட்சம் கோடி நிதி உதவி, விவசாயக் குடும்பங்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 9-ம் தேதி (நாளை) பிற்பகல் 12:30 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக விடுவிக்கவிருக்கிறார். இதன்படி 9.75 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார். மத்திய வேளாண் மந்திரியும் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com