டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார்.
டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி
Published on

புதுடெல்லி:

டைம் பத்திரிகையின் 100 செல்வாக்கு மிகுந்த தலைவர்கள் 2020 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். 'தலைவர்கள்' பிரிவில் இடம்பெற்ற இந்தியாவைச் சேர்ந்த ஒரே அரசியல்வாதி பிரதமர் மோடி ஆவார்.

மற்ற உலகத் தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்; சீன அதிபர் ஜி ஜின்பிங்; 2020 அமெரிக்க தேர்தலில் டிரம்பிற்கு ஜனாதிபதி சவால் விடுக்கும் ஜோ பிடன்; 2020 தேர்தலுக்கான அமெரிக்க ஜனநாயக துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹாரிஸ், தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்; ஜெர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கல்; மற்றும் அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் அந்தோனி பாசி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.

செல்வாக்கு மிக்க மக்கள் பட்டியலில் பிரதமர் மோடியைக் சேர்த்து உள்ள போதும் இந்தியாவின் பிரதமராக மோடி, இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை "சந்தேகத்திற்கு உள்ளாக்கியுள்ளார்", அங்கு "கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள் மற்றும் பிற மத பிரிவுகள் அனைத்துமே உள்ளனர்.

எவ்வாறாயினும், இந்து-தேசியவாதி என்று முத்திரை குத்தப்பட்ட பிரதமர் மோடியின் பாரதீய ஜனதா கட்சி, இந்தியாவின் முஸ்லிம்களை குறிவைத்து உயரடுக்கு மட்டுமல்ல, பன்மைத்துவத்தையும் நிராகரித்துள்ளது" என்று பிரதமர் மோடி குறித்து ஆசிரியர் கார்ல் விக் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதத்தி பிரதமர் குறித்து எழுதிய கட்டுரையில் டைம் இருந்தது "இந்தியாவின் வகுப்புவாத தலைமை என குறிப்பிட்டு இருந்தது. இருப்பினும், சில வாரங்களுக்குப் பிறகு, அதே பத்திரிகை ஐக்கிய இந்தியா பல தசாப்தங்களில் மோடி போல் எந்த பிரதமரையும் பாரத்தது இல்லை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com