

புவனேஸ்வர்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் பெற்று வர நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், அவர் இறந்துவிட்டதாக டிவிட்டரில் அறிவித்த திரிபுரா ஆளுநர் தத்காட் ராய் மன்னிப்பு கோரியுள்ளார்.
வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்றும், இன்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளிட்டதை அடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது உடல் நலம் பெற வேண்டி பல மத வழிபாடு நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மாலை வாஜ்பாய் இறந்துவிட்டதாக திரிபுரா ஆளுநர் தத்காட் ராய் டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியானது.
இது குறித்து எதிர்ப்புக்கள் எழுந்ததை அடுத்து, அவர் தொலைக்காட்சிகளில் சொன்னதை தாம் நம்பிவிட்டதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் கூறி மன்னிப்பு கோரியுள்ளார். தமது பழைய, தவறான குறிப்படங்கிய பதிவை நீக்கிவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.