மக்கள் தொகையை கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் -மோகன் பகவத்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் அதிக மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் -மோகன் பகவத்
Published on

லக்னோ,

நாட்டின் வளர்ந்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி உள்ளார்.

மொராதாபாத் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) யில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், கூறியதாவது:-

நாட்டின் வளர்ந்து வரும் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சட்டத்தை கொண்டு வருவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருந்தாலும், இது காலத்தின் தேவை என்று நாங்கள் உணர்கிறோம். இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பையும் கொண்டிருக்காது, அனைவருக்கும் பொருந்தும். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்.

இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கு மக்கள் தொகை வளர்ச்சியின் கட்டுப்பாடற்ற தன்மை நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com