உத்தரபிரதேசத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் விஷவாயு தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
உத்தரபிரதேசத்தில் விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழப்பு
Published on

லக்னோ,

உத்தரபிரதேசம் சோன்பத்ரா மாவட்டம் பிஜ்வார் கிராமத்தை சேர்ந்தவர் சூர்ய பிரகாஷ் (வயது 31). இவர் தனது கிணற்றில் இருந்த தண்ணீர் பம்பை எடுப்பதற்காக நேற்று காலை இறங்கினார். அப்போது அங்கு விஷவாயு கசிந்ததால் அதை சுவாசித்த அவர் மூச்சுவிட முடியாமல் அலறி உள்ளார்.

சூர்ய பிரகாஷ் அலறல் சத்தத்தை கேட்ட அவரது சகோதரர் தீபக் (வயது 35) கிணற்றுக்குள் இறங்கி உள்ளார். அவரும் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். இதை தொடர்ந்து கிணற்றுக்குள் இறங்கிய அவர்களது நண்பர் பல்வந்தும்(40) மயக்கமடைந்தார்.

3 பேரையும் கிணற்றில் இருந்து வெளியே கொண்டுவந்த கிராம மக்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் 3 பேரும் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறிவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com