

லக்னோ,
உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் ஐ.ஜி. அஷிம் அருண் பேசுகையில், கோரக்பூர், லக்னோ, பிரதாப்கார் மற்றும் ரிவானில் (ம.பி.) இருந்து பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் 10 பேரை கைது செய்து உள்ளது. பாகிஸ்தானில் இருந்து வரும் உத்தரவின் பெயரில் இவர்கள் பயங்கரவாத நிதியகம் பணியை செய்து வந்து உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நஷீம் அகமது, அர்ஷாத், சஞ்சய் சரோஜ், நிராஜ் மிஸ்ரா, ஷாகில் மாயிஷ், உமா பிரதாப் சிங், முகேஷ் பிரதாப், நிகையில் ராய் என்ற முஷ்ராப் அன்சாரி, அன்கூர் ராய் மற்றும் தயானந்த் யாதவ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் இவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து உள்ளான்.
போலியான பெயரில் வங்கி கணக்கை திறந்து, பயங்கரவாத சம்பவத்திற்காக பணம் வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக இந்திய ஏஜெண்டுகள் 10 முதல் 20 வரையில் கமிஷன் பெற்று உள்ளனர். இப்போது வரையில் ரூ. 1 கோடி வரையில் வர்த்தகம் ஆகி உள்ளது தெரியவந்து உள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்பு உள்ளது. அவர்களில் சிலருக்கு என்ன நடக்கிறது என்பதும் தெரியும். சிலருக்கு நாம் தவறுதான் செய்கிறோம் என்பது தெரியும். சிலர் இதனை லாட்டரி மோசடி என செய்து உள்ளனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடக்கிறது, மேலும் கைது நடவடிக்கை இருக்கும் என்றார்.
இவ்விவகாரத்தில் வங்கி பணியாளர்களின் பணி என்ன என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணம், துப்பாக்கி மற்றும் பிற உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. விசாரணை தொடர்கிறது.