திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், மருமகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற மாமியார்

உத்தரபிரதேசத்தில் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், மருமகளுக்கு மாமியார் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கவுசாம்பி,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால், மருமகளுக்கு மாமியார் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாலி பேகம் என்ற பெண் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஃபிரோஸ் அகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார். 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் அவரது கணவர் குடும்பத்தினர் அவருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளனர். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை இரவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேகம் அவரது சகோதரர் கவுஸ் முகமதுவுக்கு போன் செய்து மாமியார் தனக்கு விஷம் கொடுத்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து அவர்களது வீட்டிற்கு விரைந்து வந்த முகமது, உயிருக்கு போராடிய நிலையில் இருந்த பேகத்தை மீட்டு சிராத்துவில் உள்ள ஒரு சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையடுத்து முகமது அளித்த புகாரின் அடிப்படையில், பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர் மீது கட தாம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com