கிருஷ்ணர் சிலையால் மதுராவில் பரபரப்பு! போலீசார் குவிப்பு!

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணர் சிலையால் மதுராவில் பரபரப்பு! போலீசார் குவிப்பு!
Published on

மதுரா,

கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் பகுதி உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா நகரில் இருப்பதாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் தற்போது ஒரு மசூதி இருப்பதாகவும், அந்த மசூதிக்குள் புகுந்து கிருஷ்ணர் சிலையை வைக்க உள்ளதாகவும் 4 வலதுசாரிகள் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

அவர்கள் குறிப்பிடும் மசூதிக்கு மிக அருகாமையில் கேஷவ் தேவ் கோயிலும் இருப்பதால் அப்பகுதியில் அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வலதுசாரி அமைப்புகளான அகில பாரத இந்து மகா சபா, ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி நிர்மன் நியாஸ், நாராயணி சேனா மற்றும் ஸ்ரீகிருஷ்ண முக்தி தளம் ஆகிய நான்கு அமைப்புகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. கிருஷ்ணர் பிறந்த இடமாக கருதப்படும் இடத்தில் இப்போது ஒரு மசூதி உள்ளது, எனினும் அங்கு சிலையை வைப்போம் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

அவர்களுடைய இந்த மனுவை நிராகரித்துள்ள மாவட்ட நீதிபதி, அமைதியை சீர்குலைக்கும் எந்த்வொரு நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்படாது என்று தெரிவித்தார்.

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிக்காக மதுரா நகரம் மூன்றாக பிரிக்கப்பட்டு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டில் அப்பகுதி உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மசூதியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மனு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com