

பரேலி,
உத்தரகாண்டில் முதன்மை கல்வி மற்றும் விளையாட்டு துறை மந்திரியாக அரவிந்த் பாண்டே உள்ளார். இவரது மகன் அங்குர் பாண்டே. கோரக்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கார் ஒன்றில் சென்றுள்ளார். இன்று அதிகாலை 3 மணியளவில் பரீத்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 24ல் லாரி ஒன்றின் மீது மோதி இவரது கார் விபத்திற்குள்ளானது.
இதில் அவர் பலியானார். அவருடன் காரில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.