

கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கத்தாவில் பாஜகவினர் பேரணியாக சென்றனர். இந்த பேரணியில் மத்திய மந்திரி தேபஷ்ரி சவுத்ரி, மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் மற்றும் சுவேந்து ஆதிகரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேரணியாக சென்ற பாஜகவினர் மீது தீடிரென கல்வீசி சிலர் தாக்கினர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி கொடியையும் ஏந்திச்சென்ற சிலர், திரும்பி போ என கோஷம் எழுப்பியதையும் கேட்க முடிந்தது. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, பேரணி நடைபெற்ற முதைலி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பேரணிக்குக் உரிய அனுமதி பெறப்பட்டது. இருந்த போதிலும் சிலர் கல் வீசி தாக்கியதை காண முடிந்தது. இது போன்ற தந்திரங்கள் பலனளிக்காது. ஏனெனில் மேற்கு வங்காள மக்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்று பாஜக தலைவர் சுவேந்து ஆதிகரி கூறினார்.