

புதுடெல்லி,
நவம்பர் 16-ந்தேதியான இன்று தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். ராகுல் காந்தி தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது;- உண்மையை பேசுவதற்கு தண்டனை கிடைக்கும்போது, பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது என விமர்சனம் செய்துள்ளார்.
முன்னதாக, திரிபுராவில் வன்முறை குறித்த செய்திகளை வெளியிட்ட இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். இதை சுட்டிக்காட்டி பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார்.