பா.ஜ.க.வில் சேர்ந்த பெண்; வீட்டை காலி செய்ய கூறிய உரிமையாளர்

உத்தர பிரதேசத்தில் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்ததற்காக வீட்டை காலி செய்ய உரிமையாளர் கூறிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பா.ஜ.க.வில் சேர்ந்த பெண்; வீட்டை காலி செய்ய கூறிய உரிமையாளர்
Published on

அலிகார்,

நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு பிரதமர் மோடி வெற்றி பெற்றார். தேர்தலில் அதிக இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து 2வது முறையாக மீண்டும் மோடி பிரதமரானார்.

இந்நிலையில், பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை திட்ட நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வாரணாசி சென்றார்.

அவரை வாரணாசி விமான நிலையத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மற்றும் மாநில தலைவர் எம்.என். பாண்டே ஆகியோர் வரவேற்றனர். இதன்பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு திட்டத்தினை தொடங்கி வைத்து பேசினார். இதன் ஒரு பகுதியாக வாரணாசி விமான நிலையத்தில் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலை திறப்பு நடைபெற்றது. மரக்கன்றும் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்பு உத்தர பிரதேசத்தின் அலிகார் நகரில் வசித்து வரும் குலிஸ்தானா என்பவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இதுபற்றி அறிந்த அவர் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் ஆத்திரமடைந்து உள்ளார். அவர் குலிஸ்தானாவிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.

தொடர்ந்து, வீட்டை காலி செய்து விட்டு உடனடியாக வெளியேறும்படி அந்த பெண் கூறியுள்ளார். இதனால் குலிஸ்தானா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com