மெக்லாரென் 750 எஸ் ஸ்பெக்ட்ரம் அறிமுகம்

மெக்லாரென் 750 எஸ் ஸ்பெக்ட்ரம் அறிமுகம்
Published on

பிரீமியம் ஸ்போர்ட்ஸ் கார்களைத் தயாரிக்கும் மெக்லாரென் ஆட்டோமோடிவ் நிறுவனம் புதிதாக 750 எஸ் ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய தலைமுறை தொழில்நுட்பம் கொண்டதாக இது உருவாக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சிறப்பு செயல்பாட்டு பிரிவு (எம்.எஸ்.ஓ.) இதை உருவாக்கியுள்ளது. 7 வித வண்ணங்களின் கலவையாக புதிய பெயிண்ட் உருவாக்கப்பட்டு புதிய வண்ணத்தில் இது ஜொலிக்கிறது.

இந்த கார் 7 கியர்களைக் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்த 2.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 330 கி.மீ. ஆகும். மேற்கூரை இல்லாத மாடலும் இதில் வந்துள்ளது. இதில் இரட்டை டர்போ சார்ஜ்டு 4 லிட்டர் வி 8 என்ஜின் உள்ள தால் 740 ஹெச்.பி. திறனையும், 590 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். ஸ்பெக்ட்ரம் நீலம், ஸ்பெக்ட்ரம் ஆரஞ்சு, ஸ்பெக்ட்ரம் கிரே ஆகிய 3 வண்ணங் களில் வந்துள்ள இதன் விலை சுமார் ரூ.4.75 கோடி.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com