ஒடிஸி வடேர் பேட்டரி மோட்டார் சைக்கிள்

பேட்டரியில் இயங்கும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத வாகனங்களைத் தயாரிக்கும் ஒடிஸி எலெக்ட்ரிக் நிறுவனம் வடேர் என்ற பெயரிலான மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
ஒடிஸி வடேர் பேட்டரி மோட்டார் சைக்கிள்
Published on

இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 125 கி.மீ. தூரம் வரை ஓடும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,09,999. இதில் 3 ஆயிரம் வாட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அதிகபட்சம் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும். இதன் எடை 128 கி.கி. ஆகும். இரு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். முன்புறம் 7 அங்குல ஆண்ட்ராய்டு இயங்குதளம் உடைய டிஸ்பிளே உள்ளது. இதில் கூகுள் வரைபடம் வசதியும் கொண்டது. பொருட்களை வைப்பதற்கு 18 லிட்டர் இட வசதி உள்ளது. புளூடூத் மூலம் செயல் படக் கூடியது. முகப்பில் எல்.இ.டி. விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிரேக் பிடிக்கும் போது உற்பத்தியாகும் விசை மின்சாரமாக மாற்றப்பட்டு அது சேமிக்கப்பட்டு மீண்டும் வாகனம் இயங்க துணை புரிகிறது.சூழல் காப்புடன் எதிர்கால சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com