

சீனர்கள், உப்புச் சுவையுள்ள பாறைப் படிவங்களை சுரண்டி, உப்பு நீரைக் காய்ச்சி சமையல் உப்பாக பயன்படுத்தி கொண்டனர். அவர்கள் காய்ச்சிய உப்புக் கற்களில் பொட்டாசியம் நைட்ரேட் கலவை மிகுந்திருந்தது. அது தீயில் பட்டதும் பொறிகளை எழுப்பி, எரிந்து அணைந்தது.
பொட்டாசியம் நைட்ரேட் கலந்த உப்புக்கற்கள் நெருப்புக்குள் தவறி விழுந்தன. அந்த உப்புக் கற்கள் மத்தாப்புகளைப்போல் பொறித்துகள்களை உதிர்த்தபடி எரிந்து அடங்கியது. இப்படிதான் பட்டாசு உருவானது. உலகம் முழுக்க பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தது.