

மும்பை
மே மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படையில் முந்திரி ஏற்றுமதி 21 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.
மும்பை, ஜெய்ப்பூர்
இந்தியாவில் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், லக்னோ போன்ற நகரங்களில் முந்திரி அதிகமாக நுகரப்படுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் முந்திரி நுகர்வு அதிகம் இல்லை.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் முந்திரி ஏற்றுமதி 21 சதவீதம் சரிந்து ரூ.336 கோடியாக இருந்தது. பிப்ரவரியில் ரூ.306 கோடிக்கு ஏற்றுமதி ஆகி இருந்தது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி ரூ.396 கோடியாக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் அது ரூ.295 கோடியாக இருந்தது.
இந்நிலையில், மே மாதத்தில் ரூ.293 கோடிக்கு முந்திரி ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது இது 18 சதவீதம் குறைவாகும். அப்போது ஏற்றுமதி ரூ.358 கோடியாக இருந்தது. இதே மாதத்தில், டாலர் மதிப்பு அடிப்படையில் முந்திரி ஏற்றுமதி 21 சதவீதம் சரிவடைந்து (5.30 கோடி டாலரில் இருந்து) 4.20 கோடி டாலராக குறைந்து இருக்கிறது.
நம் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 8.50 லட்சம் டன் முந்திரி உற்பத்தி ஆகிறது. ஏறக்குறைய அதே அளவு முந்திரி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் ஆண்டுக்கு 17 லட்சம் டன் முந்திரி பதப்படுத்தப்படுகிறது. நம் நாட்டில் முந்திரி நுகர்வு ஆண்டுக்கு சராசரியாக 8 சதவீதம் அதிகரித்து வருகிறது.
1.25 லட்சம் டன்
கச்சா முந்திரியில் இருந்து பருப்பை எடுப்பது மற்றும் பதப்படுத்துவதற்காக நம் நாட்டில் பல தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தோல் நீக்கிய பிறகு 17 லட்சம் டன் கச்சா முந்திரி 3.45 லட்சம் டன்னாக குறைந்து விடுகிறது. இதில் 1.25 லட்சம் டன் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள அளவு உள்நாட்டில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒரு கிலோ முந்திரிப் பருப்பு விலை ஏறக்குறைய ரூ.1,000-ஆக இருக்கிறது.