கவாஸகி எம்.ஒய். 23 நின்ஜா 650

சாகசப் பிரியர்களுக்கென பிரீமியம் மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கும் கவாஸகி நிறுவனம் புதிதாக எம்.ஒய். 23 நின்ஜா 650 மாடல் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
கவாஸகி எம்.ஒய். 23 நின்ஜா 650
Published on

இதில் கூடுதலாக டிராக்ஷன் கண்ட்ரோல் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. எலுமிச்சை பச்சை நிறத்தில் வந்துள்ள இந்த மோட்டார் சைக்கிளின் விற்பனையக விலை சுமார் ரூ.7,12,000.

இது 649 சி.சி. திறன் கொண்டது. முன்புறத்தில் 4.3 அங்குல டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்டேஷன் திரை உள்ளது. ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்டது. சீறிப்பாயும் வகையில் மெல்லியதான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. நீண்டதூரம் மற்றும் சாகச பயணம் மேற்கொள்வோருக்கு ஏற்றது. பந்தய மைதானங்களிலும் இதைப் பயன்படுத்தும் வகையில் டன்லப் ஸ்போர்ட்மேக்ஸ் டயர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com