ஒன் பிளஸ் ஸ்மார்ட் கடிகாரம்

ஒன்பிளஸ் நிறுவனத் தயாரிப்பாக ஸ்மார்ட் கடிகாரம் 1.39 அங்குல அமோலெட் திரையுடன் வந்துள்ளது.
ஒன் பிளஸ் ஸ்மார்ட் கடிகாரம்
Published on

பிரீமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் ஒன்பிளஸ் நிறுவனத் தயாரிப்பாக ஸ்மார்ட் கடிகாரம் 1.39 அங்குல அமோலெட் திரையுடன் வந்துள்ளது. தூசி மற்றும் நீர் புகா தன்மை கொண்டதாக வந்துள்ள இந்த ஸ்மார்ட் கடிகாரத்தின் விலை சுமார் ரூ.14,999. வட்ட வடிவிலான இந்த கடிகாரம், வழக்கமான கைக்கடிகார தோற்றத்தைக் கொண்டிருப்பது மிகவும் அழகாக உள்ளது. 46 மி.மீ. அளவிலான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மேல் பாகத்தைக் கொண்டிருப்பது இதன் அழகை மேலும் கூட்டுகிறது. மேலும் துருப்பிடிக்காத தன்மை கொண்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

இதில் உள்ள திரை ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை அறிவுறுத்துவதோடு, அழைப்புகளுக்கு பதிலளிக்கவும் வகை செய்கிறது. மேலும் இனிய இசையைக்கேட்டு மகிழவும், புகைப்படங்கள் எடுக்கவும் உதவுகிறது. இதில் தனித்துவமாக 4 ஜி.பி. நினைவகம் உள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்டுள்ளது. ஒன் பிளஸ் டி.வி.யுடனும் இதை இணைத்து ரிமேட் மூலம் செயல்படுத்தலாம். நீங்கள் டி.வி. பார்த்தபடியே உறங்கிவிட்டால் இது தானாக செயல்பட்டு டி.வி.யை அணைத்துவிடும்.

110 வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும்போது இது சிறப்பாக செயல்பட்டு உடலில் எரிக்கப்படும் கலோரி அளவை உணர்த்தும். ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவதை உணர்த்துவதோடு, இதய துடிப்பையும் கண்காணிக்கும். இதில் 402 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி இருப்பதால் இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்களுக்கு செயல்படும். கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் இது வந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com