

இந்தியாவில் மிகவும் நம்பகமான ஸ்மார்ட்போன் பிராண்டான சாம்சங் தற்போது கேலக்ஸி சீரிஸில் ஏ 22 என்ற புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 5-ஜி யில் செயல்படும்.
இதில் 6.6 அங்குல முழு ஹெச்.டி. டிஸ்பிளே உள்ளது. இதன் பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி மற்றும் விரைவாக சார்ஜ் ஆக 15 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கிரே, மின்ட், வயலெட் உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும்.
இதில் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் உள்ளது. இது 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலாக வந்துள்ளது. 6 ஜி.பி. மாடல் விலை சுமார் ரூ.19,999. 8 ஜி.பி. மாடல் விலை சுமார் ரூ.21,999.