ஐபோன் 16 சீரிஸ் வெளியிட்ட ஆப்பிள் நிறுவனம் - விலை எவ்வளவு?

ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
Published on

வாஷிங்டன்,

உலகின் மிகவும் பிரபலமான ஐபோன் தயாரிப்பு நிறுவனம் ஆப்பிள். இந்நிறுவனம் ஆண்டுதோறும் புதிய வகை செல்போன் மாடல்களை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஐபோன் 16 சீரிஸ், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10, ஏர்பட்ஸ் 4 ஆகிய சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் நேற்று வெளியிட்டது.

பல்வேறு சிறப்பு அம்சங்கள் கொண்ட புதிய ஆப்பிள் சாதனங்களின் விலை விவரம் பின்வருமாறு:-

ஏர்பட்ஸ்:

எர்பட்ஸ் 4 - ரூ. 12,900

வாட்ச் சீரிஸ்:

ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா - ரூ. 89,900

ஆப்பிள் வாட்ச் எஸ்இ - ரூ. 24,900

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 - ரூ. 46,900

ஐபோன்:

ஐபோன் 16 புரோ மேக்ஸ் - ரூ. 1,44,990

ஐபோன் 16 புரோ - ரூ. 1,19,900

ஐபோன் 16 பிளஸ் - ரூ. 89,900

ஐபோன் 16 - ரூ. 79,900

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com