பிளாபுங்க்ட் பி.எஸ் 75 ஸ்பீக்கர்

பிளாபுங்க்ட் நிறுவனம் பிளாபுங்க்ட் பி.எஸ்75. என்ற பெயரில் 75 வாட் மற்றும் பி.எஸ் 150. என்ற பெயரில் 100 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.
பிளாபுங்க்ட் பி.எஸ் 75 ஸ்பீக்கர்
Published on

ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் பிளாபுங்க்ட் நிறுவனம் சுற்றுலா செல்லும்போது எடுத்துச் செல்லும் வகையிலான பிளாபுங்க்ட் பி.எஸ்75. என்ற பெயரில் 75 வாட் மற்றும் பி.எஸ் 150. என்ற பெயரில் 100 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.

75 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர்களில் 5.25 அங்குல அளவில் இரண்டு ஊபர்கள் உள்ளதால் இனிய இசை பரவும். நிகழ்ச்சிகளுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் இந்த ஸ்பீக்கரைச் சுற்றிலும் ஆர்.ஜி.பி. விளக்குகள் எரியும் வகையிலான வடிவமைப்பு உள்ளது.

இதில் உள்ள 2,400 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 12 மணி நேரம் வரை செயல்படும். யு.எஸ்.பி. இணைப்பு மற்றும் ஏ.யு.எக்ஸ். கேபிள் இணைப்பு வசதிகளும், 100 வாட் ஸ்பீக்கரில் 8 அங்குல ஊபர்களும் உள்ளது. நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்க வசதியாக இதனுடன் மைக்ரோபோனும் இடம் பெற்றுள்ளது.

இதில் 4,500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன் படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ் 75. மாடல் ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.8,990. பி.எஸ். 150 மாடல் ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.11,999.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com