சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழக்கும் அவலம்

இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதி உயிரிழப்புகள் நேரிடும் நிலையில் சாலையில் நடந்து செல்பவர்கள், சாலையை கடக்கும் பாதசாரிகளும் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் துயரமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழக்கும் அவலம்
Published on

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி கடந்த 2020-ம் ஆண்டு மட்டும் 11,901 பாதசாரிகள் சாலை விபத்துக்களில் சிக்கி பலியாகி இருக் கிறார்கள். அவற்றுள் கர்நாடகாவில் மட்டும் 1,536 இறப்புகள் பதிவாகி உள்ளன. அதாவது பாதசாரி இறப்புகளில் 13 சதவீதம் கர்நாடகாவில் நிகழ்ந்திருக்கிறது. இத்தனைக்கும் கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்திருந்தது. அப்படி இருந்தும் நாட்டிலேயே அதிக உயிரிழப்பு கர்நாடக மாநிலத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 2020-ம் ஆண்டில் மட்டும் கர்நாடகாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 4 பாதசாரிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.

கர்நாடகாவுக்கு அடுத்தபடியாக ஆந்திரா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிர தேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதசாரிகள் உயிரிழப்பு அதிகமாக நிகழ்ந்திருக்கிறது. ஆந்திராவில் 1,272 இறப்புகளும், மகாராஷ்டிராவில் 1,176 இறப்பு களும், தமிழ்நாட்டில் 1,164 இறப்புகளும், மத்தியப் பிரதேசத்தில் 1,073 இறப்புகளும், குஜராத்தில் 824 இறப்புகளும் பதிவாகியுள்ளன. இவற்றுக்கு நேர்மாறாக, உத்தரபிரதேசம், சிக்கிம், மிசோரம், நாகலாந்து போன்ற மாநிலங்கள் மற்றும் லடாக், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் கடந்த ஆண்டு பூஜ்ஜிய இறப்புகளை பதிவு செய்துள்ளன. இங்கு ஒரு பாதசாரி கூட விபத்தில் சிக்கி உயிரிழக்காதது ஆறுதல் தரும் விஷயமாக அமைந்திருக்கிறது.

சாலை விபத்துகளில் அதிக இறப்புகள் நிகழும் நகரங்களை பொறுத்தமட்டில் சென்னை முதலிடத்தில் உள்ளது. அங்கு 181 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பெங் களூருவில் 163 இறப்புகள் பதிவாகி உள்ளன. அதே சமயத்தில் 2019-ம் ஆண்டு 272 இறப்புகளுடன் பெங்களூரு முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த இடங்களில் அகமதாபாத் (151), விசாகப்பட்டினம் (82), ஜெய்ப்பூர் (78), விஜயவாடா (72), பரிதாபாத் (68), சூரத் (63), டெல்லி (57), இந்தூர் (56) போன்ற நகரங்கள் உள்ளன.

குடியிருப்புப் பகுதிகளில் நடைபாதைகள் 1.8 மீ அகலமும், வணிகப் பகுதிகளில் 2.5 மீ அகலமும் இருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் நகர்ப்புறங்களில் பெரும்பாலான இடங்களில் நடைபாதைகள் போதுமான அகலத் துடன் இல்லாத நிலையே நீடிக்கிறது. அங்கும் வாகனங்கள் மற்றும் வணிக ரீதியான ஆக்கிரமிப்புகள் இருந்து கொண்டிருக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com