இரட்டை சகோதரிகளும்.. இரட்டை குழந்தைகளும்..!

இரட்டையர்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுக்கப்பட்ட தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இரட்டை சகோதரிகளும்.. இரட்டை குழந்தைகளும்..!
Published on

அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியை சேர்ந்த பிரிட்டானி - பிரியானா டினே என்ற இரட்டை சகோதரிகள், அவர்களை போன்ற இரட்டை சகோதரர்களான ஜோஸ்-ஜெரமியை திருமணம் செய்து கொண்டனர். இந்த சகோதரிகள் இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு விழா ஒன்றில் ஜோஸையும், ஜெரமியையும் சந்தித்திருக்கிறார்கள்.

முதல் பார்வையிலேயே இரு ஜோடிகளும் காதல் வயப்பட்டனர். சுமார் 6 மாதங்கள் நெருங்கிப் பழகவும் செய்தனர். பின்னர் ஒருமித்த கருத்துடன் திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். இரட்டையர் சகோதரர்கள் இருவரும் தங்கள் காதலியான இரட்டை சகோதரிகளுக்கு வைர மோதிரத்தை வழங்கி திருமணத்தை நிச்சயித்துக் கொண்டனர்.

அதன்பின்னர், இரு ஜோடிகளுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு ஒரே நாளில் திருமணம் நடந்தது. அன்றைய தினம் மொத்தம் 15 இரட்டையர் ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்ததை அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி நேரலையாக ஒளிபரப்பியது. இரட்டை சகோதரிகளை இரட்டை சகோதரர்கள் திருமணம் செய்து கொண்ட தகவல் இணையத்தில் வேகமாகப் பரவியது.

அதன்பிறகு தாங்கள் கர்ப்பிணியாக இருக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர். கர்ப்பிணியாக இருந்த காலத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர். கடந்த ஆண்டு ஜனவரி 21-ந் தேதி பிரிட்டானி, ஜோஸ் இரட்டை சகோதரிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இருவருக்கும் பிறந்த ஆண் குழந்தைகள் இருவரும் அச்சு அசலாக, இரட்டையர்களை போல ஒரே தோற்றத்தில் இருந்தனர்.

குழந்தைகளுக்கு ஜெட் மற்றும் ஜாக்ஸ் என பெயரிட்டனர். தங்கள் மனைவிகளை இரு சகோதரர்களும் வெகுவாகப் பாராட்டியதோடு, வெவ்வேறு வயிற்றில் பிறந்தும், இரட்டையர்களை போல தோற்றம் கொண்டிருக்கும் தங்கள் குழந்தைகள் இரட்டையர்கள் போல வளர்வார்கள், தங்களை போலவே தோற்றத்திலும், குணத்திலும் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று பெருமிதமாக கூறுகிறார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும் எடுக்கப்பட்ட தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். அதற்கு பல தரப்பினரின் பாராட்டும் கிடைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com