யமஹா என் மேக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டர்

யமஹா நிறுவனம் தனது ஸ்கூட்டர் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் மேலும் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்கிறது.
யமஹா என் மேக்ஸ் 155 மேக்ஸி ஸ்கூட்டர்
Published on

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் இந்நிறுவனம் ஏரோக்ஸ் 155 என்ற பெயரிலான ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து தற்போது என் மேக்ஸ் 155 மாடலை இந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இது 155 சி.சி. திறன் கொண்டதாகும்.

ஸ்கூட்டர் பிரிவில் 150 சி.சி. பிரிவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தயாரிப்புகளே உள்ளன. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்நிறுவனம் திட்டமிட்டு இந்த மாடலை அறிமுகம் செய்கிறது. ஏரோக்ஸ் மாடலுக்குக் கிடைத்த வரவேற்பு இப்புதிய மாடல் அறிமுகத்துக்கு வழியேற்படுத்தியுள்ளது. இது லிக்விட் கூல்டு ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 15 பி.எஸ். திறனையும், 13.9 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. முன்புறம் மிகவும் பரந்த அளவிலான பகுதி, எல்.இ.டி. விளக்கு, பின்புறம் சற்று உயரமான வடிவமைப்பு ஆகியன இதற்கு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. முழுவதும் டிஜிட்டல் எல்.சி.டி. சிஸ்டம், ஒய் இணைப்பு செயலி, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com