அழகைத்தேடும் பச்சிளம் குழந்தைகள்

பிறந்த குழந்தைகள் கூட அழகான முகத்தைத்தான் பார்க்க விரும்புகின்றனவாம்.
அழகைத்தேடும் பச்சிளம் குழந்தைகள்
Published on

இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு ஆய்வில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். தாயின் வயிற்றில் இருக்கும்போதே குழந்தையின் மூளையில் அழகுணர்ச்சி பதிவாகிறது.

பிறந்த குழந்தையின் பார்வை மங்கலாக இருக்கும். இருப்பினும் 15 மணி நேரத்தில் அது, தன் தாயின் முகத்தை அடையாளம் கண்டு கொள்கிறது. பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகள் மற்றும் பிறந்து இரண்டு நாட்களான குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. குழந்தையின் முன்னால் அழகான மற்றும் அழகு குறைந்த முகங்கள் காட்டப்பட்டன. அழகு குறைந்த முகத்தை விட, அழகான முகத்தை 80 சதவீத நேரம் அதிகமாகப் பார்த்தன என்றும் சொல்கிறது அந்த ஆய்வு.

'கவர்ந்திழுக்கும் தன்மை ஒருவரது கண்கள் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல... ஒரு குழந்தை பிறந்தது முதல், அல்லது பிறப்புக்கு முன்னரே கூட அதன் மூளையில் பதிவான விஷயம்' என்கிறது எக்ஸெடெர் பல்கலைக்கழக ஆய்வுக்குழு.

அழகுணர்ச்சி மட்டுமின்றி நல்ல இசையைத் தேர்வு செய்யும் திறனும் குழந்தைகளிடம் இருப்பதாக இந்தக் குழு தெரிவிக்கிறது. ஒரு குழந்தை கேட்கும்படி நல்ல இசை ஒலிபரப்பப்பட்டது. தாலாட்டு போன்ற அந்த இசையைக் கேட்டு குழந்தை திரும்பியது! அதே சமயம் கரடுமுரடான இசையை ஒலிபரப்பியபோது குழந்தை அதை விரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com