துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகள் - அமைச்சர் தகவல்

துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரிக்கு வரும் கல்வியாண்டுக்குள் 10 வகுப்பறைகளை அரசு கண்டிப்பாக கட்டித்தரும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
துறைமுகம் தொகுதியில் உள்ள பாரதி மகளிர் கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகள் - அமைச்சர் தகவல்
Published on

சென்னை,

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில், தி.மு.க. உறுப்பினர் பி.கே.சேகர்பாபு (துறைமுகம்), பாரதி மகளிர் கல்லூரியில் 4,446 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஆண்டுக்காண்டு மாணவர்கள் கூடுதலாக சேருகின்றனர். அதற்கேற்றார்போல் கட்டிடங்களும் அதிகரிக்கப்பட வேண்டும், பேராசிரியர்களும் அதிகரிக்கப்பட வேண்டும். இங்கு 20 காலி பணியிடங்கள் இருக்கிறது. எனவே பேராசிரியர்களையும், கூடுதலாக கல்லூரி கட்டிடங்களையும் கட்ட வேண்டும் என்றார்.

இதற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பாரதி மகளிர் கல்லூரியில் காலை நேரத்தில் 3,809 மாணவிகள் படித்து வருகின்றனர். மாலை நேரத்தில் 637 மாணவிகள் படிக்கின்றனர். அங்கு போதுமான அளவு பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு, தரமான கல்வி கற்று கொடுக்கப்படுகிறது என்றார்.

அதன்பின்பு பி.கே.சேகர்பாபு, இந்த கல்லூரி சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடுவதால் அதனை தவிர்க்க நடைமேம்பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. உடனடியாக அதனை அமைத்தால் விலை மதிப்பற்ற உயிர்கள் காப்பாற்றப்படும். இந்த கல்லூரிகளுக்கு தேவையான கட்டிடங்களை கட்ட நிதி ஒதுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அமைச்சர் கே.பி.அன்பழகன், மாணவிகளுடைய சேர்க்கை கூடுதலாக வருவதால் அந்த கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகள் தேவைப்படுகின்றன. கல்லூரிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியில், வரும் கல்வியாண்டுக்குள் 10 வகுப்பறைகளை அரசு கண்டிப்பாக கட்டித்தரும்என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com