கண்ணைக் கட்டிக்கொண்டு 2 நிமிடங்களில் 106 தேங்காய் உடைப்பு..! அரசுப் பள்ளி மாணவி சாதனை..!

உலக சாதனை நிகழ்ச்சிக்காக அரசுப்பள்ளி மாணவி கண்ணைக் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து சாதனை படைத்தார்.
கண்ணைக் கட்டிக்கொண்டு 2 நிமிடங்களில் 106 தேங்காய் உடைப்பு..! அரசுப் பள்ளி மாணவி சாதனை..!
Published on

திருவண்ணாமலை,

ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள நாராயண சாமி செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி சுருதி. இவரது தங்கை காஞ்சனா இரு கைகளை விரித்தபடி தரையில் படுத்துக் கொள்ள அவரை சுற்றி 106 தேங்காய்கள் பரப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாணவி சுருதி தன் கண்களைக் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து உலக சாதனை படைத்தார்.

இந்நிகழ்வை உலக சாதனை ஆவண நிறுவனம் வீடியோ படக்காட்சிகளில் படமாக்கியது. செய்யார் கல்வி மாவட்ட அலுவலர் நளினி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பலர் சாதனை புரிந்த மாணவிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com