18 வயது நிரம்பியவர்கள் வாக்காளராக பதிவு செய்ய வேண்டும்

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளராக பதிவு செய்ய வேண்டும்
Published on

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருவாரூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், 18 வயது நிரம்பியவர்கள் அலட்சியம் இல்லாமல் வாக்காளராக பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி திருவாரூரில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. திருவாரூர் ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். ஊர்வலம் திருவாரூர் பனகல் சாலையில் உள்ள திருமண மண்டபம் வரை சென்றது. அங்கு கல்லூரி மாணவ-மாணவிகள், அந்த மண்டபத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் கலெக்டர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாசு

நிகழ்ச்சியில் கலெக்டர் பேசுகையில், 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கட்டாயம் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும். 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் அலட்சியம் இல்லாமல் உடனடியாக தங்களை வாக்காளராக பதிவு செய்து கொள்வதுடன் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என கூறினா.

தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடந்த ரங்கோலி போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கும், சுவரொட்டி வரைதல் , பாட்டு, வினாடி- வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும், நேரு யுவகேந்திரா மூலம் தையல் பயிற்சி பெற்ற 75 பேருக்கு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, தாசில்தார் நக்கீரன், முதன்மை கல்வி அலுவலர் விஜயா உள்ளிட்ட பலா கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com