312 ‘நீட்’ பயிற்சி மையங்கள் நாளை திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

312 ‘நீட்’ பயிற்சி மையங் கள் நாளை திறக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
312 ‘நீட்’ பயிற்சி மையங்கள் நாளை திறக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Published on

சென்னை,

தேசிய நூலகர்கள் மாநாடு சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்றது.

மாநாட்டை தொடங்கிவைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசும்போது, பள்ளி மாணவர்களுக்கு நூல்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்துவதற்காக 12 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் செயல்படுத்தப்படும். அவை காலை ஒரு பள்ளிக்கும், மாலையில் மற்றொரு பள்ளிக்கும் செல்லும். பள்ளிகளில் வாரத்துக்கு ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் புத்தக வாசிப்பு நிகழ்ச்சியும் நடத்தப்படும் என்றார்.

நாளை தொடங்கும்

பின்னர் அவர் அளித்தபேட்டி வருமாறு:-

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற கருத்தில் தமிழக அரசு உறுதியோடு இருக்கிறது. நீட் தேர்விலிருந்து மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாகும். நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

நீட் பயிற்சிக்காக முதல்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) எஞ்சிய 312 மையங்களும் தொடங்கப்படும். எனவே தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் 412 பயிற்சி மையங்களும் நாளை முதல் செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நூலகர்கள் மாநாட்டில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் நந்தகுமார், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன், நூலக இயக்குனர் சுந்தர் உள்பட பலர் பேசினார் கள். நூலகத்துறை இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் வரவேற்றார். முடிவில் நூலகத்துறை இணை இயக்குனர் நாகராஜமுருகன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com