இந்தியாவில் நடப்பாண்டில் இதுவரை 42 ரேபிஸ் தொற்று மரணங்கள் - மத்திய அரசு தகவல்

செப்டம்பர் 1-ந்தேதி வரை நாட்டில் 45.50 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வாணியம்பாடி நகராட்சி கவுன்சிலர் முகமது நவ்மன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய அரசின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மையம் பதிலளித்துள்ளது. அந்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 13 ஆக இருந்த ரேபிஸ் தொற்று மரணங்கள், 2025-ம் ஆண்டின் 9 மாதங்களில் 42 ஆக அதிகரித்துள்ளது. 2024 ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ந்தேதி வரை நாட்டில் 45.50 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 6.05 லட்சம் சம்பவங்கள் நடந்துள்ளன.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






