

சென்னை,
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது.
இந்த நிலையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் அணிக்கு மே 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை மாமல்லபுரத்தில் பயிற்சி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் ஜெல்ஃபாண்ட் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்பில் பங்கேற்கும் 3 அணிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 வீரர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் 6 பேர் ஆண்கள் பிரிவிலும், 2 பேர் பெண்கள் பிரிவிலும் பங்கேற்கின்றனர்.