

சென்னை,
மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அவ்வப்போது சலுகைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் யுகாதி மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று மற்றும் நாளை 50 சதவீதம் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சலுகை ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனை மெட்ரோ ரயில் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.