கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 51 பேர் வீடு திரும்பினர்


கரூர்  கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 51 பேர் வீடு திரும்பினர்
x

கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 பேரில், 51 பேர் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரூர்,

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி 110 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின் அவர்களுடைய குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் கூட்ட நெரிசலில் காயமடைந்த 110 பேரில், 51 பேர் குணமடைந்து அவர்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 59 பேரில், 51 பேர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 8 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் உள்ள 59 பேருக்கும் உயர்சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய உயரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.

1 More update

Next Story