6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் இன்று முதல் 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
6 மாதத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
Published on

மதுரை

புதுக்கோடடை மாவட் டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் ராமையா.இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் முறையான அனுமதியுடன் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த நிலையில் மலேசியாவில் இருந்து மணலை இறக்குமதி செய்தோம். இந்த மணல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுவிக்க மறுக்கின்றனர்.

எனவே மணலை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்க அனுமதிக்கவும், 6 லாரிகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட மணலை எங்களிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை கொண்டு செல்ல அனுமதிக்கலாம். தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளை இன்று முதல் 6 மாதங்களுக்குள் முழுவதுமாக மூட வேண்டும். புதிதாக எந்த மணல் குவாரிகளையும் திறக்க கூடாது.

தமிழகத்தின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் மூலம், தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

மணல் இறக்குமதிக்கான விதிமுறைகளை வகுக்க வேண்டும். சோதனை சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களை கண்காணிப்பு கேமரா பொருத்தி மணல் கடத்தல் குறித்து கண்காணிக்க வேண்டும். என உத்தரவில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com