கன்னியாகுமரி அருகே தூக்க மாத்திரை தின்று 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

கன்னியாகுமரி அருகே தூக்க மாத்திரை தின்று 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கன்னியாகுமரி அருகே தூக்க மாத்திரை தின்று 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி
Published on

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி அருகே தூக்க மாத்திரை தின்று 8-ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூக்க மாத்திரை தின்ற மாணவி

கன்னியாகுமரியை அடுத்த கொட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் பக்கத்து கிராமத்தை சேர்ந்த 13 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

நேற்று காலையில் வெகுநேரமாகியும் மாணவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கூடத்துக்கு நேரமாகுது சீக்கிரம் எழுந்திரு என குடும்பத்தினர் அவரை எழுப்பினர்.

ஆனால் அந்த மாணவி எழுந்திருக்க முடியாத அளவுக்கு மயக்க நிலையில் இருந்தார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை சாப்பிட்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

உடனே பதற்றம் அடைந்த குடும்பத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக கொட்டாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனால் பரபரப்பு தகவல் வெளியானது.

சுமாராக படிக்கும் மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி மாணவ, மாணவிகளை தேர்ந்தெடுத்தனர். அதில் தூக்க மாத்திரை சாப்பிட்ட 8-ம் வகுப்பு மாணவியும் ஒருவர். இந்த சிறப்பு வகுப்பு 7-ம் வகுப்பு நடக்கும் அறையில் நடந்துள்ளது. இதனால் சில மாணவிகள் அந்த மாணவியை கிண்டலடித்துள்ளனர். நீ இன்னும் 7-ம் வகுப்பே தாண்டவில்லையா? என்று கூறியுள்ளனர்.

இது அந்த மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் அவர் தற்கொலை செய்யலாம் என முடிவெடுத்துள்ளார். இதற்காக வீட்டில் இருந்த தூக்க மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்து சாப்பிட்டுள்ளதால் மயக்க நிலைக்கு சென்றது தெரிய வந்தது. மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com