பெண்ணாடம் அருகே கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துபோக்குவரத்து பாதிப்பு

பெண்ணாடம் அருகே கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெண்ணாடம் அருகே கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்துபோக்குவரத்து பாதிப்பு
Published on

பெண்ணாடம், 

பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரியில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று பெரம்பலூர் பகுதியில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. டிராக்டரை ஆதமங்கலத்தை சோந்த திரிசங்கு என்பவர் ஓட்டினார். பெ.பொன்னேரி ரெயில்வே மேம்பாலம் மீது ஏறுவதற்காக டிராக்டரை திருப்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்தது. இதனால் விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்துக்குள்ளான டிராக்டர் மற்றும் கரும்புகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினர். இச்சம்பவத்தால் விருத்தாசலம் - திட்டக்குடி நெடுஞ்சாலையில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com