ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்

கடலூர் முதுநகர் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது.
ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
Published on

கடலூர் முதுநகர்:

கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் மனைவி சரண்யா(வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அவரை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தொண்டமாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது செல்லும் வழியிலேயே சரண்யாவிற்கு பிரசவ வலி அதிகமாகி உள்ளது. இதனை அடுத்து ஓட்டுனர் சரண்ராஜ் ஆம்புலன்சை சாலை ஓரமாக நிறுத்தினார். ஆம்புலன்ஸ் அவசரகால நுட்புணர்(செவிலியர்) தசரதன் பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இதில் சரண்யாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய், சேய் இருவரும் தொண்டமாநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com