

சென்னை,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை கட்டாயமாக வழங்க வேண்டுமென்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆதார் கட்டாயம் என்று அறிவித்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கையை பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, மாணவர்கள் தங்களது ஆதார் எண்களை தாங்கள் பயிலும் பள்ளிகளிலேயே வழங்கலாம் மற்றும் இதற்காக எந்த கட்டணமும் கிடையாது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.